side Add

கைதிகள் தப்பியோட்டம்- ஒருவர் கைது!!

மட்டக்களப்பு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும்  போது தப்பி சென்ற கைதிகள் இருவரில் ஒருவர் ஒரு சில மணித்தியாலங்களில் சிறைச்சாலை அதிகாரிகளினால்
மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஓட்டமாவடி பிரதேசத்தில்  வைத்துக் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை அவர்கள் மீதான விளக்கமறியல்  நீடிக்கப்பட்டது.

நீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரான போது குறித்த இரு கைதிகளும்  தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு இரு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் வீடு ஒன்றில் மறைந்திருந்த வேளை ஓரிரு மணித்தியாலங்களில்  கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தவர் தேடப்பட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like