side Add

சிறுமிகள் மூவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய- ஐந்து பிள்ளைகளின் தந்தை!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் மூவரைத் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்,  ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மொனராகலை எத்திமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரும் அதே இடத்தைச்  சேர்ந்தவராவார்.

சந்தேகநபரான 48 வயதான நபர், மூன்று சிறுமிகளையும், பல்வேறான சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு  உள்ளாக்கியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோருடன், சந்தேகநபர் நெருக்கமான உறவை வைத்து கொண்டே இந்தக்  காரியத்தைச் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், எத்திமலைப் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின்  அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். அவரை  எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like