பழங்குடியினர் விவகாரம்- முக்கிய தீர்மானம்!!

இனிவரும் காலங்களில் உலக பழங்குடியினர் தினத்தை தாம் கொண்டாடப் போவதில்லை என்று இலங்கையின்  ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசிடம் கையளித்தோம். எனினும்  பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

எனவே, இனிவரும் காலங்களில் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு பதிலாக அந்தப் பணத்தில் கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிடத் தீர்மானித்துள்ளோம்.

ஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். எங்களது பரம்பரை  கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசி குடிகளின் பட்டினியைப் போக்க வேண்டும். அவர்களின்
பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு கூடிய பங்களிப்பை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close