6 லட்­சத்து 50 ஆயி­ரம் வழக்­கு­கள் நிலு­வை­யில்

நீதி அமைச்சு தெரி­விப்பு

0 90

6 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை­யி­லான வழக்கு விசா­ரணை நிலு­வை­யில் உள்­ளது. இந்த ஆண்­டுக்­குள் வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­தும் செயற்றிட்­டங்­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும். இவ்­வாறு நீதி மற்­றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்­சர் தலதா அது­கோ­ரல தெரி­வித்­துள்­ளார்.

நீதி அமைச்­சர் இது தொடர்­பில் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
மக்­க­ளின் வரிப் பணத்­தை மாத ஊதி­ய­மாக பெறும் அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் மக்­க­ளுக்­காகப் பணி­பு­ரியவேண்­டும். நீதி அமைச்­ச­ராக பத­வி­யேற்ற குறு­கிய காலத்துக்குள் பல­த­ரப்­பட்ட விட­யங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

தற்­போது 6 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை­யி­லான வழக்­கு­கள் நிலு­ வை­யில் உள்­ளன. இதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­கள் சிர­மத்துக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். குறிப்­பிட்ட காலத்­திற்­குள் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­கள் தொடர்­பாக துரித நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள சட்­டமா அதி­பர் மற்­றும் சட்ட வல்­லு­நர்­க­ளி­டம் ஆலோ­ச­னை­கள் பெறப்­பட்­டுள்­ளன. மக்­க­ளின் நலனைப் பாது­காக்­கும் ஒரு துறை­யாக நீதித்­துறை செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தொரு விட­ய­மா­கும் –- என்­றார்.

You might also like