இலங்கையைத் தவறாக புரிந்திருந்தது இந்தியா

பெங்களூரில் வைத்துக் கூறினார் மகிந்த

இந்தியாவுடன் எனது நாடு நல்ல உறவைக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் எம்மைப் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டிருந்தனர். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்­தி­யா­வின் ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள ஏழு­ ம­லை­யான் ஆல­யத்துக்கு வழி­பா­டு­க­ளுக்கு மகிந்த ராஜ­பக்ச சென்­றி­ருந்­தார். வழி­பா­டு­களை முடித்து இலங்­கைக்குத் திரும்­பு­வ­தற்கு முன்­ன­தாக, பெங்­க­ளூர் வானூர்தி நிலை­யத்­தில் வைத்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
துறை­மு­கங்­கள், நெடுஞ்­சா­லை­களை அமைக்­கும் பணி­களை முத­லில் நாங்­கள் இந்­தி­யா­வுக்கே வழங்­கி­னோம். ஆனால், எப்­ப­டியோ அம்­பாந்­தோட்­டை­யில் துறை­மு­கத்தை அமைக்க அவர்­கள் ஆர்­வ­மாக இருக்­க­வில்லை.

போர் நடந்து கொண்­டி­ருந்த நேரம் என்று நினைக்­கி­றேன். வேறென்ன செய்­வது? நாங்­கள் சீனா­வி­டம் சென்­றோம். இத­னைப் பற்­றிக் கூறி­னோம். அந்­தத் திட்­டத்தை அவர்­கள் உட­ன­டி­யா­கவே ஏற்­றுக் கொண்­டார்­கள். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் அது ஒரு வணிகப் பரி­மாற்­றம் மட்­டு­மே­யா­கும்.

எப்­ப­டித் திருப்­பிச் செலுத்­து­வார்­கள் என்று அவர்­க­ளுக்­குத் தெரி­யும். எமக்கு அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தின் முக்­கி­யத்­து­வம் தெரி­யும். அதனை வழங்­கியபோது, நாட்­டுக்­குப் பின்­னர் மற்றையதைப் பார்ப்­பதே, ஒரு தலை­வ­ராக எனது பிர­தான கட­மை­யாக இருந்­தது.

துர­திர்ஷ்டவ­ச­மாகத் தற்­போ­தைய அரசு எல்­லா­வற்­றை­யும் விற்­று­விட்­டது. எமது கொள்கை தனி­யார் மய­மாக்­க­லுக்கு எதி­ரா­ன­தாக இருந்­தது. தற்­போ­தைய அரசு 99 ஆண்டு குத்­த­கைக்கு அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை விற்று விட்­டது. இந்­தி­யா­வு­டன் எனது நாடு நல்ல உற­வைக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆனால் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் எம்­மைப் பற்றித் தவ­றான புரி­தல் க­ளைக் கொண்­டி­ருந்­த­னர். இந்­தியா ஒரு பதின்ம வயது பெண் என்று ஒரு இந்­தி­யத் தூது­வர் எனக்­குக் கூறி­னார், ஏனென்­றால், பதின்ம வய­துப் பெண்­கள் தவ­றான புரிதல்­க­ளைக் கொண்­டி­ருப்­பார்­கள். இத­னைக் கூறி­ய­வர் இந்­தி­யா­வின் முன்­னாள் தூது­வர் நிரு­பமா ராவ்.

இலங்கை தொடர்­பான இந்­தி­யா­வின் அய­லு­ற­வுத்­து­றைக் கொள்கை சிறந்­த­தாக இருந்த அதே­வேளை, சில விட­யங்­கள் குறித்து விவா­திக்­கப்­பட வேண்­டிய தேவை உள்­ளது -– என்­றார்.

You might also like