side Add

தற்கொலைப்படை தாக்குதல்- 15 பேர் உயிரிழப்பு!!

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் ஆயுததாரிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர்  உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு  தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை  தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் இராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும், பலர் படுகாயம்  அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால்,  பாதுகாப்புக்காக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

You might also like