அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து கோத்தபாய இந்த பாடலை பாடியுள்ளளார்.

கடந்த காலங்களில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பல இடங்களில் பாடல் பாடி அசத்தியிருந்தார். அவர்களுக்கு இணையாக முன்னாள் அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பாடலுக்கு நடனம் ஆடி பரவலாக பேசப்பட்டனர்.

தற்போது இராணுவ அதிகாரியான கோத்தபாய பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

You might also like