அர­சுக்­குள் இரு­வா­ரங்­க­ளில் அதி­ர­டி­யான மாற்­றங்­கள்

அறிக்­கை­கள் தயார் ­நி­லை­யில்

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான கூட்டு அர­சுக்­குள் இரண்டு வாரங்­க­ளில் பெரிய மாற்­றங்­கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஏற்­பட்ட பின்­ன­டை­ வை­ய­டுத்து கூட்டு அரசை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது, கட்­சிக்­குள் எத்­த­கைய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க பல குழுக்­களை அமைத்­தார்.

கூட்டு அர­சால் முன்­னெ­டுக் கப்­பட வேண்­டிய அபி­வி­ருத்­திச் செயற்­றிட்­டங்­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக அமைச்­சர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வின் அறிக்கை இவ்­வா­ரத்­துக்­குள் தலைமை அமைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அறிக்­கை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே பொரு­ளா­தார, அபி­வி­ருத்தி உட்­பட ஏனைய பல­து­றை­க­ளில் அதி­ரடி மாற்­றங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

அதே­வேளை, ஆளுங்­கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுக்­கும்­போது எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­ கள் சம்­பந்­த­மாக ஆராய்­வ­தற்­காக பிர­தி­ய­மைச்­சர் அல­வத்­து­வல தலை­மை­யி­லும் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குழு­வின் அறிக்­கை­யை­யும் அடுத்­த­வா­ரம் ரணி­லி­டம் கைய­ளிக்­க­வேண்­டு­மென பணிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழு­வுக்கு பிரதி அமைச்­சர்­க­ளான அமீர் அலி, கரு­ணா­ரத்ன பர­ண­வித்­தான மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான லக்கி ஜய­வர்­தன, ஆனந்த குமா­ர­சிறி, பந்­து­லால் பண்­டா­ர­கொட, அர்­ஷன் ராஜ­க­ருணா, ஜய­ரத்ன, எக்­டர் அப்­பு­ஹாமி, தில­க­ராஜ் உள்­ளிட்­ட­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அறி­ய­மு­டி­கி­றது.

You might also like