வீதியை  மறுசீரமைத்து  தரக் கோரி போராட்டம்

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.

அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் வீதியை  மறுசீரமைத்து  தரக் கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் இடங்கிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த பகுதியில் உள்ள சுமார் 800 குடும்பங்கள் இந்த வீதியைப் பயன்படுத்துவதாகவும், 2000 மேற்பட்ட மக்கள் நாளாந்தம் குறித்த வீதியை பயன்படுத்தி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தவற விடாதீர்கள்:  கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!!

You might also like