தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை

உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னர் தமது கட்­சி­யின் பெயரை தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்று பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தடை விதித்­துள்­ளது.

தேர்­தல்­கள் ஆணைக் குழு­வி­ன­ருக்­கும், கட்­சி­க­ளின் செய­லர்­க­ளுக்­கும் இடையே நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­ளும் தரப்­பி­னர், தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்ற பெய­ரைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­
ற­னர்.

இது தமது கட்­சி­யின் பெயரை ஒத்­த­தாக உள்­ளது. தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்ற பெய­ரைப் பயன்­ப­டுத்த தடை விதிக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

அதை ஆராய்ந்த தேர்­தல்­கள் ஆணைக்­குழு, தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்ற பெய­ரைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை­வி­தித்­துள்­ளது.

தேர்­தல் காலத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­ரிய முத்­தி­ரை­யைப் பயன்­ப­டுத்தி தேர்­தல் பரப்­புரை மேற்­கொள்­வ­தற்­கும் தேர்­தல்­கள் ஆணைக்­குழு தடை விதித்­துள்­ளது.

You might also like