ஒரு வயதுக் குழந்தையின் தந்தை விபத்தில் சாவு

மட்டக்களப்பு, மண்டூர்  பகுதியில்  இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஷ்ணப்பிள்ளை வாசன் (வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார்

வவுணதீவு இலுப்படிச்   சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில்  பேருந்தில் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றது.

மேலதிக  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், குறித்த விபத்துத் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like