இரணைமடுச் சந்தியில் விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாங்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரு டிப்பர் வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

கிளிநொச்சி – முல்லைத்தீவுப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது.

முன்பாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தப்பட்டதால் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் அதன்மேல் மோதுண்டது என்று கூறப்படுகின்றது.

வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது என்று தெிரவிக்கப்பட்டது.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like