ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேருக்கு மன்று தண்டம்

மூதூர் , சூடைக்­குடா மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யத்­தின் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­கள் உட்­ட­பட 7 பேருக்கு தலா 25 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது.
வர­லாற்று சிறப்பு மிக்க மூதூர் சூடைக்­குடா மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யத்­தில் கடந்த ஆண்டு மார்­கழி மாதத்­தில் ஆலய வளா­கத்தை சீர­ மைக்­கும் நோக்­கு­டன் நிலம் சமப்­ப­டுத்­தப்­பட்ட பணி­கள் இடம் பெற்று வந்­தது.

இந்­தப் பகு­தி­யில் தொல்­பொ­ருள் சின்­னங்­கள் காணப்­ப­டு­கின்­றன என்­றும், அவற்றை ஆலய நிர்­வா­கி­க­ளும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த வேலை­யாள்­க­ளும் சேதப்­ப­டுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டின் பேரில் சம்­பூர் பொலி­ஸா­ரால் கடந்த முத­லாம் திகதி வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

சந்­தேக நபர்­கள் மூதூர் நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டு த்­தப்­பட்டு கடந்த 4ஆம் திக­தி­வரை ஆலய நிர்­வா­கி­கள் மற்­றும் வாகன சாரதி உட்­பட நால்­வர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர். வேலை­யாள்­கள் மூவர் பொலி­ஸில் சர­ண­டைந்து நீத­வான் முன்­னி­லை­யில் பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

இவ் வழக்கு மீண்­டும் 4 ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­பட்ட போது நேற்­று­வரை விளக்­க­ ம­றி­யல் நீடிக்­கப்­பட்­டி­ருந்து. வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது குற்­றம் சுமத்­தப்­பட்ட ஆலய நிர்­வா­கி­ க­ளுக்­கும் சார­திக்­கும் சார்­பாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ள­ரும் சட்­டத்­த­ர­ணி­யு­மா­கிய கி.துரை­ரா­ஜ­சிங்­கம் மற்­றும் பிர­பல சட்­டத்­த­ர­ணி­க­ளான ஜெக­ஜோதி மற்­றும் புலேந்­தி­ரன் மக­றுப் முபா­ரிஸ் பைசர் ஆகிய ஏழு சட்­டத்­த­ர­ணி­கள் குழு முன்­னி­லை­யா­கி­னர். தண்­டம் விதித்து வழக்கை முடி­வு­று த்­தி­யது நீதி­மன்று.

You might also like