மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இதில் 30 பேருக்கு சீருடைகளும், 10 பேருக்கு வீதி போக்குவரத்து அங்கிகளினையும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகா் கனேசநாதனால் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவியான சுவிஸ் நாட்டில் வசிக்கும்  உதயகுமாா் சோவிஸ்வரியால் மாணவா்கள் 16 பேருக்கு காலனிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு வல்வெட்டித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ் குமாரசேன மற்றும் பாடசாலை அதிபா் ஆசியா்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

 

 

You might also like