ரசிகர்கருக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஓவியா!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. எப்போதும் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து ஒளிப்படங்களை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீட்டுக் ழந்தையை தூக்கி கொஞ்சும் ஒளிப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுகிறார் ஓவியா.

You might also like