பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க?

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள…

தற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு!!

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 45க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் வௌிநாட்டு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அந்த…

கந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு!!

கந்தான திம்பிரிகஸ்துவ பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதியில் வைக்கப்பட்ட குண்டு செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம்…

பூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு?

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள்…

புர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை!!

வத்தளையில் ஆண் ஒருவர் புர்கா அணிந்து சென்றதால் இன்று காலை பதற்ற நிலைமை ஏற்பட்டது. புர்கா உடையுடன் சென்றவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அந்த நபரைச் சுற்றிவளைத்துச் சோதனை செய்ய முற்பட்டனர். அதையடுத்து அங்கு பதற்றம்…

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு!! – சோதனை தீவிரம்!!

கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.…

தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்!! – பொலிஸார் தெரிவிப்பு!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்திட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.…

தெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்

தெகிவளைப் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் விடுதி ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஓ/எல் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற இணையத் தளத்தின் ஊடாகவும், அலைபேசிக் குறுந்தகவல்கள் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். நாடளாவிய ரீதியில்…

கேப்பாபிலவு மக்களைச் சந்தித்தார் ஆளுநர்

முல்லைதீவுக்கு இன்றுவருகை தந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்துள்ளார். இராணுவம் அபகரித்தள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும் மேலாக…