மைத்திரி அடுத்த வாரம் கட்டாருக்குப் பயணம்

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கட்டாருக்குப் பயணிக்கவுள்ளார் என்று அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சக்திவளம், ஆய்வு, நீர்வழங்கல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இதன் போது கைச்சாத்திடப்படவுள்ளன எனத்…

தொழிலுக்கு சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் ஒரே படகில் சென்ற தந்தையும் மகனும் என…

சிக்கலில் மாட்டிக்கொண்டார் மற்றொரு பொலிஸ் அதிகாரி

அதிகாரியை ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் தென் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. பதுளை பொலிஸ் பிரிவு கணினிப்பிரிவின் பொறுப்பதிகாரியை கீழே தள்ளி கடுமையாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தாக்கினார்…

ஐ.தே.கவின் ரத்மலானை தொகுதி அமைப்பாளராக ஹிருணிகா நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ரத்மலானைத் தொகுதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக்கடிதத்தைத் தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க நேற்று வழங்கினார்.

பட்டாசு வெடித்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நண்பர்களுடன் பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த 9 வயதுடைய சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு லிந்துலை பெரிய மட்டுக்களைப்…

லேகிய விற்பனையின் ஈடுபட்டவர் கைது

கிண்ணியா, புஹாரியடி பகுதியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப்…

தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இலங்கை விமான நிறுவனத்தில் பணியாற்றும்இ 50…

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹுவ,…

குளத்தில் மூழ்கி வானூர்திப்படை உத்தியோகத்தர் உயிரிழப்பு

திருகோணமலை மகதிவுல்வெவ குளத்தில் நீராடச் சென்ற வானூர்திப் படை உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்தது. நாகலெ்வெவ பகுதியைச் சேர்ந்த நோமன் ஜெயரட்ன (வயது-33) என்பவரே…

பாடசாலைக்குள் நுழைந்த மனநோயாளியால் குழப்பம்

வவுனியா சைவப்பிரகாசா பாடசாலைக்குள் திடீரென நுழைந்த மனநோயாளியொருவரால்குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதிகளில் உலாவரும் மனநோயாளி ஒருவர் திடீரென பாடசாலைக்குள் நுழைந்துள்ளார்.…

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை நிறுவ யோசனை

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை புதிய சட்டத்தின் கீழ் புதிய பிரதேச சபைகளை நிறுவுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உடன்பாடு தெரிவித்துள்ளதாக மாகாண, உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது. நுவரெலியா,…

விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கக் கோரிக்கை

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரச தலைவர் ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு , அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அரச தலைவரால் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.…