(யோகி)
கிளிநொச்சி அக்கராஜன் குளம் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்துக்கு இன்று (24) காலை வருகை தந்த திருச்சொரூப வாகனத்தை அக்கராஜன் குளம் பங்கு மக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து மக்களின் வழிபாட்டுக்காக மாலை மூன்று மணி வரை குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பல பகுதிகளில் இருந்து அடியவர்கள் மடு அனையின் தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர்.
அன்னையின் திருச்சொரூபம் இன்று பிற்பகல் உருத்திரபுரம் பற்றிமா ஆலயத்துக்கு செல்லவுள்ளது.
நாளை கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்துக்கும் பரந்தன் ஆலயத்துக்கும் மடு அன்னையின் திருச்சொருபம் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.