(யோகி)
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் மிகவும் சடுதியாக அதிகரித்து காணப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்து காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்றைய தினம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான தென்னை அபிவிருத்திச் சபையில் முகாமையாளர் வைகுந்தன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வெண் ஈ பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,வெண் ஈ தாக்கம் சடுதியாக அதிகரித்து காணப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீர் தொடங்கி வீட்டில் பயன்தரக்கூடிய வகையில் இருந்த செடி கொடிகள் அனைத்திலும் வெண் ஈ தாக்கம் மிக சடுதியாக அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டதுடன் கடும் வரட்சி காரணமாகவும் வெண் ஈ தாக்கம் காரணமாகவும் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தென்னைகளுக்கு அதிகளவான நீரினை பாச்சுவதாலும் தென்னை மரங்களை முடிந்தவர்கள் தண்ணீரில் கழுவி விடுவதாலும் தென்னைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் எனவும், கடுமையான மழை கிடைக்குமாயின் வெண் ஈ தாக்கம் முற்றும் முழுதாக அழிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் வெண் ஈ தாக்கம் ஏற்பட்டுள்ள தேங்காய்கள் (தோலுடன்) முழுமையாக வேறு பகுதிக்கு கொண்டு செல்வது மற்றும் வெண் ஈ தாக்கம் ஏற்பட்டுள்ள தென்னையின் ஓலைகளை வேறு பகுதிக்கு கொண்டு செல்வதை முற்று முழுதாக தென்னை செய்கையாளர்கள் கைவிட வேண்டும் எனவும் அதன் ஊடாகவும் வேறு பகுதிக்கு வெண் ஈ பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் உங்கள் பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் அருகில் உள்ள கமநல சேவைகள் பணிமனையில் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை நேரில் வந்து உங்களது தென்னை செய்கையை பார்வையிட்டு அதற்கான தீர்வினையும் பெற்றுத் தருவதற்கு காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தென்னை செய்கையாளர்கள் அருகில் உள்ள கமலநல சேவை பணிமனையை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தென்னச்சகைக்கு ஏற்பட்டுள்ள வெண் ஈ முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டுமாயின் தென்னை செய்கையாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து தென்னையில் ஏற்பட்டுள்ள வெண் ஈ காண தடுக்கும் முறையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.