சர்க்கரைவள்ளி கிழங்கில் அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இதில் வைட்டமின் , இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளத்துடன் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது சர்க்கரைவள்ளி கிழங்கு. பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கரு உருவாக்குதல் எளிமையாகிறது. மேலும் வயிற்றுப்புண்கள் ஏற்படாமல் இருக்கவும் அது குணமாகவும் சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம்.
புற்றுநோய் ஏற்படாமல் இருக்க சக்கரைவள்ளி கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதனால் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாகின்றது. சர்க்கரை வள்ளி கிழங்கில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் கேன்சர் எதிர்ப்பு கூறுகளாகவும் செயல்படுகிறது.
குறிப்பாக பர்பிள் சர்க்கரை வள்ளி கிழங்கில் காணப்படும் அந்தோசயனின் என்று சொல்லக்கூடிய ஆன்டிஆக்ஸிடண்டுகள் சிறுநீர்ப்பை, குடல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை மந்தப்படுத்துதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.