(புதியவன்)
இல.01, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் எதிர்வரும் 01.05.2024 ஆம் திகதியிலிருந்து இல. 42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) எனும் முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது எனவும் புதிய அலுவலகமானது பிதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும்- மருத்துவமனை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளரால் அறியத்தரப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.