மேடம்: எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
இடபம்: மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
மிதுனம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.
கடகம்: இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். 1 மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.
சிம்மம்: தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
கன்னி: தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்: காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்
கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.
தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள் வது நல்லது.
மகரம்: செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் கடன்கள் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர் பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.