மாதவன்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை(30) மாலை 4மணிக்கு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின் கடல் உணவு தொழிற்சாலைக்கு இவர்கள் வருகை தர உள்ளனர்.
மேலும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே இக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.