மாதவன்.
வடமாகாண கல்வி பணிமனையின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் த. உமாவின் பதவி முத்திரை தலைகீழாக பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது;
வட மாகாண கல்வி பணிமனையின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கே இவ்வாறு தலைகீழாக அவரது பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
குறித்த கடிதத்தில் பதவி முத்திரையை பொறித்தவர் தலைகீழாக பெறிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கடிதத்தை புதிதாக வரையாமல் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரைக்கு மேலாக மீண்டும் பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம் பெறுவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு வரும் நிலையில் கடிதத்துக்கு கூட ஒழுங்காக பதவி முத்திரை இடப்படாமை கல்வி அமைச்சு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதாக அமைகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.