(ஆதவன்)
2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சக்திமிக்க கடவுச் சீட்டுகளின் பட்டியலில் இலங்கை 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கைக்கு 96 ஆவது இடம் கிடைத்துள்ளது.
ஹென்லி நிறுவனம் 199 நாடுகளின் கடவுச்சீட்டுக்களை உள்ளடக்கி இந்த ஆய்வை நடத்தியது. நுழைவிசைவு இல்லா இலகு அணுகல்களை பிரதானமாகக் கருத்திற்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா 80ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 101ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 97ஆவது இடத்திலும், நேபாளம் 98ஆவது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெய்ன், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.