(ஆதவன்)
மருந்துப் பொருள்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பாகவும், சுகாதார ஊழியர் இடமாற்றக் கொள்கை தொடர்பாகவும் இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளை அழைக்க ஒன்றியம் தீர்மானித்தது. தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் பணிமற்றும் மேற்பார்வை குறித்தும் ஒன்றியத்தில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.