ஏற்றுமதி வருமானம் குறித்து இலங்கை சுங்கவரித்திணைக்களம் அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
இலங்கை சுங்கவரித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டெம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக தரவுகள் கிடைத்துள்ளன.
மேலும் ஒகஸ்ட் 2023 இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14.94% ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆடைகள், ஜவுளி, ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.