இஸ்ரேல்- ஹமாஸ் யுத்த நிறுத்தம் குறித்து சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது' என தெரிவித்துள்ளார். இதே கருத்தை பாப்பரசரும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தத்தில் 1,400 இஸ்ரேலியரும், 5100 பாலஸ்தீனரும் கொல்லப்பட்டதுடன் இத் தொடர் மோதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவதற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
அமெரிக்கா ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு சீனா எதிர் நிலைப்பாட்டினை எடுக்கின்றமை வழமை இம்முறை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ள நிலையில் சீனாவும் அதற்கு ஆதரித்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைன் - ரஷ்ய போரில் அமெரிக்கா உக்ரைனை ஆதரித்த நிலையில் அதற்கு எதிர்மாறாக சீனா ரஷ்யாவை ஆதரித்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தின்போது சீனாவின் கருத்தானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.