இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கிண்டலாக பதிவு மேற்கொண்ட பிரபல இஸ்ரேலிய நடிகை மைசா அப்துல் ஹாதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்து வரும் நிலையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்தமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெர்லின் சுவற்றை உடைத்து எறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம் என தடுப்பு வேலிகளை புல்டோசரை வைத்து இஸ்ரேல் இராணுவம் உடைத்ததை கிண்டலுடன் நடிகை மைசா அப்துல் ஹாதி பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.