மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
பொறுகாமம் சமுர்த்தி வங்கியில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த நிலக்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் நீதிபதியின் முன்னிலையில் சடலம் நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உபட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்தது களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.