புதியவன்
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய வகை நிமோனியா காய்ச்சல் பரவி வருவது தொடர்பில் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் இந்த நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
வட சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் அறிவித்துள்ளது.
நிமோனியா நோய் தொற்று வட சீன குழந்தைகளிடையே அதிகமாக பரவி வருவதாகவும் அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகின் முதல் கொவிட்-19 நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.