செல்வன்.
முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுமதிக்கத்தக்க இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குள் புகுந்து கடும் சேதத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.