மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதிய ஆண்டுக்கான அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும்  நிகழ்வு!!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதிய ஆண்டுக்கான அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும்  நிகழ்வு!!

புதியவன்.

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க செயலர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. 

2024 ஆம்  ஆண்டுக்கான  பணிகளை ஆரம்பிக்கும்  முதல் நாள் வைபவம் ''வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை'' எனும்  தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.  

தேசியக்கொடியேற்றப்பட்டு, இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட உரையும் இடம்பெற்றது. 

இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான அரசசேவை உறுதியுரை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வானது மேலதிக மாவட்ட அரசாங்க செயலர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றதுடன் இதன்போது மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்ததுடன், நிகழ்வின் நிறைவில் உத்தியோகத்தர்களிடையே புத்தாண்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள் சார்ந்த அலுவலகங்களிலும் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)

#battinews

159 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.