அண்மையில் கிழக்கு மாகாணக் கல்வி பணிமனை வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்துச் செய்ய கோரி பெருந்தொகையான கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் மாபெரும் கண்டன போராட்டம் இன்று புதன்கிழமை(14) இடம்பெற்றது.
இதேவேளை இன்று அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிப்பு குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர எச்.எம்.எம் ஹரீஸிடம் ஆசிரியர்கள் இன்று நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்ததை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.