(யோகி)
கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்று முன்தினம் (25) அழிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10 மணிக்கு பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்துக்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் இருந்த மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும் , வெட்டியும்
சேதப்படுத்தியுள்ளனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.