ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆறு பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆறு பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நான்கு பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

275 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.