செலவன்.
தன்னார்வ தொண்டாற்றும் இளைஞர்கள் இணைந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 30 குடும்பங்களுக்கு நுளம்புவலைகள் வழங்கி வைக்கப்பட்டன .
விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஊடாக அறுபதாயிரம் ரூபா நிதி பங்களிப்பில் முல்லைதீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(23) இடம்பெற்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு மற்றும் பனிக்கன்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 30 குடும்பங்களுக்கான நுளம்பு வலைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் இ.றமேஸ் கிராம அலுவலர் த.தனபால்ராஜ் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு வழங்கி வைத்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.