(புதியவன்)
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டனில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மன்னர் தனது சொந்த திட்டமிட்ட சிகிச்சைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (26) காலை மருத்துவமனையில் தனது மருமகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னர் குறைந்தது ஒரு இரவாவது மருத்துவமனையில் கழிப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மை குறிப்பிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.