மாதவன்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனை அபிவிருத்திப் பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையும் யாழ். போதனா மருத்துவமனையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது. ஊர்காவற்றுறை மருத்துவமனை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடாத்தப்பட்டது. இந் நடைபவனி யாழ் போதனா மருத்துவமனையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை மருத்துவமனையை அடைந்தது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.