சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளச்சேனை சந்தை சதுக்கத்தில் இன்று புதன்கிழமை (01) போரத்தின் தலைவரும் மூத்த ஊடவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலும் சிறப்பு அதிதியாக அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அம்பாறை ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் வருகை தந்த அனைவருக்கும் யன்தரும் மரங்கள் மற்றும் கற்றாளைக் கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.