ஹைலெவல் வீதி மீகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலைச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் ஹெட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த வினிது சத்சர என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சிறுவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
சிறுவனின் தந்தை மற்றும் காரை ஓட்டிச் சென்றவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
INTHA SEITHIYAI THAMILARKAL PARTHU ALATHU PADITHU ENA SEIVATHU SETHAVIDUKU PORATHA THAMILAR VAZHKIRA IDATHIL NADAI PERUKIR SAMBAVANKALAI PODUNKAL.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.