சந்திரமுகி பாகம்-1 எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை உலகம் அறியும். ரஜினிக்கு 2005ஆம் ஆண்டு கம் பேக் கொடுத்த திரைப்படமும் அதான் எனலாம் .
அதனுடைய பாகம்-2 பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடிப்பில் சந்திரமுகி 2 நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாகம்1இனை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று விமர்சனம் இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
முதல் நாள் மட்டுமே சந்திரமுகி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது சந்திரமுகி 2 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் வெற்றி.
கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை சந்திரமுகி 2 படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.