தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தமன்னா நடித்து வருகிறார். அவர் ஆடிய ‘காவாலா’ பாடல் ‘ஜெயிலர்’ படத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்தி வெப் தொடர்களில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கும் நடிகை தமன்னா, இப்போது ஜப்பான் நிறுவனமான ஷிஷீடோ (Shiseido) என்ற அழகு சாதன பொருட்களுக்கு இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தமன்னா கூறுகையில் “நூற்றாண்டுக்கும் மேலாகத் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.