‘பிசாசு 2’ படத்தை நடிகர் மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை டி.முருகானந்தம் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
கடந்த வருடமே இந்தப் படம் முடிவடைந்துவிட்டாலும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கின், மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இதை தயாரிக்கிறார். இதில் வில்லனாக நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விஜய் சேதுபதி கால்ஷீட் கிடைத்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.