அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் இயக்குநர்களுடன் இணைந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா.
தற்போது இயக்குநர் சிவாவுடன் இணைந்து கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சூர்யா43 படத்திற்காக சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற படங்களிலும் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் முதலில் எந்தப் படத்தை லோகேஷ் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.