சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரியும். சமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவை நாக சைதன்யா காதலிப்பதாக பல மாதங்களாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தான் சமந்தா செய்த காரியம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைத்திருக்கிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக சேலை அணிந்து சென்றார் சோபிதா. அந்த சேலையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த போஸ்ட்டை நாக சைதன்யா லைக் செய்தார். மேலும் சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். அவரின் புகைப்படத்தை சமந்தா லைக் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.