புதியவன்.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று மாலை வேஸ்பர் ஆராதனையைத் தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பணியும் அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரினால் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.