(ஆதவன்)
நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிவரவியல் பணிமனை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு 5.5 சதவீதமாக காணப்பட்ட வேலையற்றோர் தொகை 2022ஆம் ஆண்டு 4.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகப் புள்ளிவிவரவியல் பணிமனையின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
மாகாண ரீதியாகப் பார்க்கும்போது ஊவா மாகாணத்திலேயே வேலையற்றோர் எண்ணிக்கை கூடுதலாகக் காணப்படுகிறது. மாவட்ட ரீதியாக பதுளை மாவட்டத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை கூடுதலாகவும் மன்னார் மாவட்டத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.