நெற் பயிர்களில் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் அதிகரிப்பு; அவசரமாகக் கூட்டப்பட்ட கலந்துரையாடல்
நெற் பயிர்களில் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் அதிகரிப்பு; அவசரமாகக் கூட்டப்பட்ட கலந்துரையாடல்

 புதியவன்.

வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான 'வெண்முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல்  மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக் குழுவின் கேட்போர் கூடத்தில் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா தலைமையில் இடம்பெற்றது.

 இக் கூட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் வட மாகாணத்தில் தற்போது நெற் பயிர்களில் பாரிய அளவு சேதத்தை ஏற்படுத்தும்  நோய் தாக்கம் தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகளுக்கு பணிப்பாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நோய் தாக்கத்தின் பாதிப்புகள் தொடர்பாகவும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்  மற்றும் பாவிக்கப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாகவும் பணிப்பாளரினால்  விளக்கம் அளிக்கப்பட்டது

இதன் போது நெற்பயிர்ச்செய்கையில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் வெண் முதுகு தத்தியினால் பாரிய பிரச்சினைகளுக்கு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் இவற்றில் 4 மாவட்டம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஹெக்டெயர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில்  650 ஹெக்டெயர் நிலப்பரப்பும், வவுனியா மாவட்டத்தில் 700  ஹெக்டெயர் நிலப் பரப்புமாக பெரும் பரப்பு வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மன்னாரை பொறுத்தவரையில் மிக குறுகிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார். (ச)

MannarNews

272 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.