மன்னார் மாவட்டச் செயலாளராக  கே.கனகேஸ்வரன் நியமனம்!
மன்னார் மாவட்டச் செயலாளராக  கே.கனகேஸ்வரன் நியமனம்!


 (புதியவன்)

 

மன்னார் மாவட்டத்திற்கான மாவட்ட செயலாளராக கே.கனகேஸ்வரன்  இன்றைய தினம் ( 21.12.2023 ) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் அசோக அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும்  மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி குழுவின் தலைவர் கே. காதர் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை (23.12.2023) காலையில் பதிவியேற்கவுள்ளார்.

1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் அவர் 2004 ஓக்டோபர் முதல் 2015 ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றினார்.

2015 ஜூன் முதல் 2019 செப்டெம்பர் வரையில் மருதங்கேணிப் பிரதேச செயலாளராகவும் 2019 ஒக்டோபர் முதல் 2019 டிசம்பர் வரையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் அவர் பணியாற்றினார்.

2019 டிசம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராகப் பணியாற்றிய வேளை நிர்வாக சேவை விசேட தரத்துக்குத் தேர்வாகிய அவர் 2023 நவம்பர் 22 முதல் தற்போது வரையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தநிலையில் நாளைமறுதினம் (23) சனிக்கிழமை முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராகப் பதவியேற்கும் வகையில் இன்று 21 அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

370 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.